மீண்டும் ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்டங்களில் பள்ளிகள் மூடல்!

 
 மீண்டும் ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்டங்களில்  பள்ளிகள் மூடல்!
ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து பாதுகாப்பு கருதி பள்ளிகள் மூடப்பட்டன. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ரஜௌரி, பூஞ்ச் ​​மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மீண்டும் புதன்கிழமை(மே 14) மூடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநரகத்தின் உத்தரவில் பள்ளிகள் மூடலுக்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் கூறப்படவில்லை.

இதுகுறித்து கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  ஜம்மு, ரஜௌரி, பூஞ்ச் ​​மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் புதன்கிழமை மூடப்படும். இருப்பினும், கதுவா மாவட்டத்தின் உதம்பூர் மற்றும் பானி, பஷோலி, மகான்பூர், பட்டு, மல்ஹார் மற்றும் பில்லாவர் மண்டலங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களின் பதிலடியாக  'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்ட   தாக்குதல்களின் மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.  100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் .  பாகிஸ்தானின் அடுத்தடுத்த ராணுவ ஆக்கிரமிப்பை இந்திய ஆயுதப்படைகள் திறம்பட முறியடித்தன மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல விமான தளங்களைத் தாக்கின. இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் முதல்கட்டமாக மே 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது