2027-க்குள் 99% வேலைகள் பறிபோகும் அபாயம் - விஞ்ஞானி யம்போல்ஸ்கியின் எச்சரிக்கை!

 
ஏஐ லேப்டாப்

செயற்கை நுண்ணறிவு மனிதர்களை விட வேகமாக வளர்ந்து வரும் நிலையில், வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் மனித உழைப்பின் தேவை 99 சதவீதம் வரை குறைந்துவிடும் என டாக்டர் யம்போல்ஸ்கி கணித்துள்ளார்.

இதுவரை நடந்த தொழில்நுட்பப் புரட்சிகளில், ஒரு வேலை போனால் மற்றொரு புதிய வேலை உருவாகும். ஆனால் ஏஐ புரட்சி அப்படி இருக்காது என எச்சரித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் மனிதர்கள் செய்யும் அனைத்துப் பணிகளையும் இயந்திரங்களே செய்யும் நிலை உருவாகும். பழைய தொழில்நுட்ப மாற்றங்களில் மனிதர்களும் இயந்திரங்களும் இணைந்து பணியாற்றினர். ஆனால் இனி இயந்திரங்களே சுயமாகச் செயல்படும் என்பதால் மனிதர்களுக்கான இடம் இருக்காது.

ஏஐ

உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் மட்டுமின்றி, அறிவு சார்ந்த வேலைகளும் இதில் தப்பிக்காது. செய்திகளை உருவாக்குவது, பாட்காஸ்ட் (Podcast) செய்வது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மனிதர்களை விட இயந்திரங்கள் சிறப்பாகச் செய்யும். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கலை சார்ந்த பணிகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்தும். அனைத்து வேலைகளும் பறிபோகும் சூழலில், சில குறிப்பிட்ட வேலைகள் மட்டும் தற்காலிகமாகத் தப்பிக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறுகிறார்:

மனிதர்களால் கைகளால் செய்யப்படும் பொருட்களுக்கு ஒரு தனித்துவமான மதிப்பு இருப்பதால், அந்தக் கலைஞர்களின் வேலை நீடிக்கலாம். மனித உணர்வுகளைப் புரிந்துகொண்டு தீர்வு காண வேண்டிய சூழலில், மனித ஆலோசகர்களின் தேவை இருக்கும். ஏஐ-ன் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் மற்றும் வழிநடத்தும் உயர்நிலைப் பணிகள்.

ஏஐ தொழில்நுட்பத்தைப் புரிந்து கொண்டு, அதனை நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப வேலை செய்ய வைக்கும் வல்லுநர்கள். இயந்திரங்களால் புரிந்துகொள்ள முடியாத நுணுக்கமான மனிதப் பிரச்சனைகளைக் கையாள்பவர்கள்.

ஏஐ கூகுள்

தொழில்நுட்பத்தின் வேகம் மனிதர்களின் கற்கும் வேகத்தை விட மிக அதிகமாக இருப்பதை யம்போல்ஸ்கி சுட்டிக்காட்டுகிறார். "நாள்தோறும் நான் படித்துக்கொண்டே இருந்தாலும், செய்யறிவுடன் ஒப்பிட்டால் நான் தொடர்ந்து முட்டாளாகிக் கொண்டிருக்கிறேன்" என்று அவர் கூறியிருப்பது, ஏஐ-ன் அசுர வளர்ச்சியை உணர்த்துகிறது.

நாஸ்காம் போன்ற இந்திய அமைப்புகள் ஏஐ-யால் பாதிப்பில்லை எனக் கூறினாலும், யம்போல்ஸ்கி போன்ற உலகளாவிய விஞ்ஞானிகள் தரும் இந்த எச்சரிக்கை, வருங்காலத் தலைமுறையினர் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!