ஸ்கூட்டர் நேருக்கு நேர் காருடன் மோதல்… தூக்கி வீசப்பட்ட பெண்கள்... பதற வைக்கும் வீடியோ!
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் காரட் பகுதியில் நடந்த சாலை விபத்து பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நகரின் முக்கிய சாலையில் ஸ்கூட்டரில் சென்ற இரண்டு பெண்கள் மீது, எதிர்பாராத விதமாக கார் ஒன்று நேருக்கு நேர் மோதியது.
📍Karad, Maharashtra: A speeding bike crashed into a Mahindra Bolero in Budhwar Peth on Monday, leaving two young women seriously injured. pic.twitter.com/9cHs62MDYz
— Deadly Kalesh (@Deadlykalesh) January 22, 2026
மோதிய வேகத்தில் இருவரும் காற்றில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் அவர்கள் துடித்தனர்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிவேகமே விபத்துக்குக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
