காவல்துறையினருக்கு ஜாக்பாட்!! இனி வேலைநேரத்தில் தினமும் குளிர்பானம், பழரசம்!!

 
பழரசம்

தமிழகம் முழுவதும் கோடைகாலம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. சாலையோரங்களில் இளநீர், பழரசக்கடைகள், வெள்ளரி, தர்பூசணி கடைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. அத்துடன் காலை வேளையில் கம்பு, கேழ்வரகில் தயாரித்த கஞ்சிகள் , பதநீர் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல்- மே மாதங்களில் தான் கோடை வெயில் கொளுத்த ஆரம்பிக்கும். ஆனால் இந்தாண்டு மார்ச் முதல் வாரம் முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெப்பநிலை அதிகமாக உள்ளது. இதனால் குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இளநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது.

பழரசம்

அதேநேரம் சாலைப் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்கள் பகல் நேரங்களில் சிரமத்தை எதிர்கொள்ள தொடங்கினர். இதனால் காவலர்களுக்கு குளிர்பானங்கள், பழரசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் போக்குவரத்துப் பிரிவில் முக்கிய சாலைச் சந்திப்புகள், சிக்னல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு பழரசம் வழங்கப்பட்டது.

ராசிபுரம் போக்குவரத்துக் காவல் பிரிவு ஆய்வாளர் என்.வெங்கடாஜலம், உதவி ஆய்வாளர் கே.நடராஜன் ஆகியோர் பேக்குவரத்துப் பிரிவு சிறப்பு ஆய்வாளர்கள் குமாரசாமி, முத்துசாமி, போக்குவரத்து தலைமைக் காவலர்கள் கவிதா, பிரபாவதி, சுகன்யா, காவலர்கள் சத்யா,ஷாஜகான், சந்தானம், சசிகுமார் ஆகியோருக்கு பழரசம் கொடுத்து இதனை துவக்கி வைத்தனர்.

பழரசம்

அரசின் உத்தரவு படி காவலர்களுக்கு கோடைகாலம் முழுவதும் நாள்தோறும் பழரசம் வழங்கப்படும் என காவல் ஆய்வாளர் வெங்கடாஜலம் தெரிவித்தார்.நாள் முழுவதும் வெயிலில் காயும் காவலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இது உள்ளது. இந்த தகவல் தமிழகம் முழுவதும் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web