அலறவிடும் அண்ணாமலை... வக்காலத்து வாங்கும் வழக்கறிஞர்... கலங்கி நிற்கும் தியாகராஜன்!

 
பிடிஆர்

திமுக அமைச்சர்களின் அபரிமிதமான சொத்து மதிப்பு விவரங்களை கடந்த தமிழ் வருடப்பிறப்பன்று வெளியிட்டார் பா.ஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் ரூபாய் 200 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டி பேட்டியும் அளித்திருந்தார். அதில் உதயநிதி ஸ்டாலின் பற்றியும் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது மான நஷ்ட வழக்கு தொடுப்பதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த நோட்டீசுக்கு, அண்ணாமலை சார்பாக வழக்கறிஞர் பால் கனகராஜ் உதயநிதியின் வக்கீல் வில்சலுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பதில் நோட்டீஸில் அண்ணாமலை தனது பேட்டியில் தெரிவித்த விவரங்கள் உண்மையானவை. மக்கள் நலன் கருதி, மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த புள்ளி விவரங்களை தெரிவித்திருந்தார். இந்த விவரங்களை வெளியிட எனது கட்சிக்காரருக்கு உரிமை உள்ளது. இந்த புள்ளி விவரங்கள் கற்பனையானது, அவமதிப்புக் குரியது என்பதை அண்ணாமலை மறுத்து வருகிறார்.

அண்ணா அறிவாலயம்

சட்ட நடவடிக்கை எடுப்பதாக மிரட்டி அவரது குரலை ஒடுக்கி விட முடியாது. உங்கள் கட்சிக்காரர் உதயநிதி, தன் குடும்ப அரசியல் அதிகாரத்தை தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ரெட் ஜெயன்ட்டுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குவதற்காகவே இந்த தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளதோடு உதயநிதி, தனது குடும்பத்தின் வழியாக கிடைத்த அதிகாரத்தால் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். உதயநிதியின் குழந்தைகள் பெயரை குறிப்பிட்டதால் குழந்தைகள் உரிமை சட்டத்தில் வழக்குப் போடுவதாக கூறியிருக்கிறார்.

இந்த பேட்டியில் அவரது குழந்தைகள் பெயர் மற்றும் அவர்களின் பெயரில் உள்ள சொத்து விவரம் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. இவை வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் தான். அவர்களது படமோ மற்ற தனிப்பட்ட விவரங்களோ பகிர படவில்லை. குழந்தைகள் பாதுகாப்பு கமிஷனை அணுகினால், அதை எதிர்கொள்ள அண்ணாமலை தயாராக இருக்கிறார். நோபிள் ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் தொடர்பு இல்லை என்று சொல்வது சரியல்ல. நோபிள் புரமோட்டர் பிரைவேட் லிட் நிறுவனத்தில் உதயநிதி இயக்குனராக இருந்தார். முதல்வர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ள துபாய் நிறுவனத்துடன் நோபிள் நிறுவனத்துக்கு தொடர்பு இல்லை என்று உதயநிதி சொல்வது அடிப்படை ஆதாரம் இல்லாதது. இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அண்ணாமலை

திமுகவின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வைரலான வீடியோவில் உதயநிதியும் முதல்வரின் மருமகன் சபரீசனும் தாத்தா கருணாநிதி சம்பாதித்த பணத்தைவிட அதிகமாக ஒரே வருடத்தில் 30 ஆயிரம் கோடி சேர்த்துள்ளனர் என்று பேசியுள்ளார். திமுக மற்றும் உதயநிதி குடும்பத்தினர் தொடர்பாக அண்ணாமலை கூறியது முற்றிலும் உண்மை. இவ்வாறு பதில் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னவாகும் இந்த வழக்கு என்பதே மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web