அலறி அடித்து ஓட்டம் பிடித்த பக்தர்கள்!! சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த 110 அடி கோபுரம்!!

 
ஆந்திரா

பிப்ரவரி 18ம் தேதி சனிக்கிழமை உலகம் முழுவதும் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து சிவ ஆலயங்களில் சிறப்பு தரிசனம், வழிபாடுகளுக்கு அலங்காரங்கள் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் தயாராகி வருகின்றன.

கோபுரம் சரிவு

அந்த வகையில் ஆந்திராவில் பல்நாடு அருகேயுள்ள குருவையாபாளையத்தில்  அமைந்துள்ள சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் மிக, மிக  விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  அதே போல் நடப்பாண்டு சிவராத்திரி விழாவிற்காகவும் ரூ 30 லட்சம்  செலவில்  மின் அலங்கார கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது.

கோபுரம் சரிவு
இந்த அலங்கார கோபுரம் சவுக்கு கட்டைகள் மற்றும் மூங்கில்களால் உருவாக்கப்பட்டது.  இந்த கோபுரத்தை தூக்கி நிறுத்தும் பணிகளில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.  அப்போது எதிர்பாராத விதமாக மளமளவென  கோபுரம் சரிந்து விழுந்தது.கத்தி, கூச்சலிட்டுக் கொண்டே இந்த பணியில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் தெறித்து ஓடினர். ஆனாலும் பலருக்கு படுகாயம். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மிக பிரம்மாண்டமாக ரூ30லட்சம் செலவில் உருவான கோபுரம் சீட்டுக்கட்டு போல் சரிந்தது பக்தர்களிடையே  பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web