கதறித் துடித்த தாய்!! 8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

 
தருண்

2கே கிட்ஸ் பிள்ளைகள் தொட்டாற்சிணுங்கி மனோபாவத்தில் வளர்ந்து வருகின்றனர். யாரும் அவர்களை கேள்வி கேட்கவே கூடாது. இதை செய்யாதே. நல்லதை பின்பற்று என அறிவுரை வழங்கவும் கூடாது. திட்டவும் கூடாது.  இன்றைய பள்ளிக்குழந்தைகள் எதற்கெடுத்தாலும் மன அழுத்தத்தில் ஆழ்ந்து விடுகின்றன. படி என பள்ளிகளில் ஆசிரியர் சொன்னால் மன அழுத்தம். வீட்டில் பெற்றோர் இதை செய்யாதே எனக் கூறினால் மன அழுத்தம்  பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என்ன செய்வது அவர்களை எப்படி நல்வழிப்படுத்துவது எனத் தடுமாறி வேறு வழியில்லாமல் எல்லாவற்றிற்கும் தலையாட்டி வருகின்றனர். 

கடும் உளைச்சலில் பொதுமக்கள்!! 3 நாட்களுக்கு மொபைல் சேவைகள் ரத்து!!

தற்போதைய வாழ்க்கை முறையில் பள்ளி மாணவர்களின் படிப்பு மற்றும் செயல்களை நிர்ணயிப்பதில் மொபைல் போன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. கொரோனா காலகட்டத்திற்கு முன் கையில போன எடுத்தா தொலைச்சிடுவேன்னு சொன்ன பெற்றோர்களே புது மொபைல் போன்கள் ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கிக் கொடுத்தனர். இப்போது அதை விட்டு பிள்ளைகளை பிரிக்கவே முடியவில்லை. அதிலும் குறிப்பிட்ட மொபைல் போன் தான் வேண்டும் என்ற அடம் பிடித்தலும். 2 பிள்ளைகள் இருக்கும் வீட்டில் அதுதான் பெரிய சண்டையே. முன்பெல்லாம் டிவி ரிமோட்டுக்கு சண்டை போட்டவர்கள் தற்போது செல்போனுக்கு சண்டை போடுகின்றனர். ஆனால் அதுவே சில நேரங்களில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. 

அக்காவும், தம்பியும் மொபைலில் விளையாடிக் கொண்டிருந்த போது இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டது. இதனால் 8ம் வகுப்பு படிக்கும் சிறுவன் கோபத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 நெல்லை டவுன் தைக்கா தெருவில் மைக்கேல் ராஜ் - மேரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தருண் என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைக்கேல் ராஜ் உயிரிழந்து விட்டார். இதனால் அவரது மனைவி மேரி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து தனது குழந்தைகளை படிக்க வைத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று தனது வீட்டில் இருந்த சிறுவன் தருண் திடீரென அறைக்குள் சென்றார். நீண்டநேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த தாய் மேரி சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மகனை மீட்ட தாய் மேரி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

மேரி

இதனைத் தொடர்ந்து சிறுவனின் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் தருணுக்கும் அவரது சகோதரிக்கும் செல்போனை யார் பயன்படுத்துவது என்ற பிரச்சனையில் கோபமடைந்த சிறுவன் தருண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web