அலறிய பயணிகள்... பேருந்து கவிழ்ந்து கோர விபத்து... 31 பேர் உயிரிழப்பு!

 
பொலிவியா
திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம் தான். பொலிவியாவில் சுமார் 2625 அடி பள்ளத்தாக்கில் பயணிகளுடன் அலறலுடன் பேருந்து உருண்டு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

பொலிவியாவில் நடந்த இந்த பேருந்து விபத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பொலிவியா

யோகல்லாவின் தென்மேற்கு நகராட்சியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் இருந்து சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கிட்டத்தட்ட 800 மீட்டர் (2625 அடி) பள்ளத்தாக்கில் இருந்து கவிழ்ந்து கீழே விழுந்ததாக உள்ளூரைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். 

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 10 பெரியவர்கள் மற்றும் 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் பலர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விபத்து

இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மலைப்பாதையில் திருப்பங்கள் நிறைந்த பாதை என்று கூறிய அவர், பேருந்தின் வேகம் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?