கதறும் ஊழியர்கள்!! கூகுள், அமேசான் , டிஸ்னியை தொடர்ந்து “யாகூ” 1000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு!!

 
யாகூ

உலகம் முழுவதும் பெருநிறுவனங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவை ஈடுகட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு, உக்ரைன் ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான போர், அரசியல் நிலைத்தன்மை, கச்சா எண்ணெய் விநியோகம், உற்பத்தி நுகர்வோர் வேறுபாடு என பற்பல  காரணங்களால் உலக பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.

யாகூ
இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, உலகப் பொருளாதாரம் 2023ல்  மந்த நிலையை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படியே உலகப் பொருளாதாரம் மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக  பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. ட்விட்டர் , அமேசான், மைக்ரோ சாப்ட், கூகுள் தொடங்கி  பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில்  பிரபல இணைதள தேடுபொறி நிறுவனமான 'யாகூ' 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாகூ

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடுமையான பொருளாதார நிலைத்தன்மை காரணமாக தங்கள் ஊழியர்களில் 12 சதவீத ஊழியர்கள் அதாவது 1000 பேரை இந்த வார இறுதியில் பணி நீக்கம் செய்ய உள்ளோம் .  வரும் மாதங்களில் அடுத்தடுத்த முயற்சிகளில் மேலும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் யாகூ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web