”காப்பத்துங்க... இங்கேயே சமாதி ஆகிவிடுவேன் போல" ஓமனில் பணிக்கு சென்ற பெண் கதறல்!

 
சபுரா


திருச்சி மாவட்டம், தென்னூர் பகுதியில் வசித்து வருபவர்  ஆரிப். இவருடைய மனைவி  சபுரா. இவருக்கு 11ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். தனது வாழ்வாதாரத்திற்காக சபுரா வீட்டு வேலைக்காக ஓமன் நாட்டிற்கு ஏஜென்சி மூலம் கடந்த ஜூன் மாதம் சென்றுள்ளார். ஆறு மாதமாக சம்பளம் அனுப்பி வந்த நிலையில், வேலைப்பளு அதிகம் இருந்ததால்  சொந்த ஊருக்கு திரும்ப விரும்புவதாக வேலை செய்த இடத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவர் ஓமனில் உள்ள லேபர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விட்டார். 

ஓமன்


லேபர் அலுவலகத்தில் உள்ளவர்கள் 3.50லட்சம் கொடுத்தால் சபுராவை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வேலைக்கு அனுப்பி வைத்த ஓமன் ஏஜென்ட்டிடம் கேட்டதற்கு 20 நாட்களில் அவர் இந்தியா திரும்புவார் என உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் ஆரிபை தொடர்பு கொண்ட சபுரா, இங்கு தன்னை சித்திரவதை செய்வதாகவும், பணம் தரவில்லை என்றால் போலீஸிடம் ஒப்படைத்து விடுவோம் என மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை அனுப்பி வைத்த ஏஜென்ட் வீட்டிற்கு சென்று பொறுமையாக பேசும்படி  தெரிவித்தார்.  

திருச்சி

இல்லையென்றால் 'இங்கேயே சமாதியாகி விடுவேன் போல இருக்கிறது' என பயந்தபடி கண்ணீருடன் ஆடியோ அனுப்பி உள்ளார்.இந்நிலையில் சபுராவின் கணவர் ஆரிப், ஓமனில் சிக்கியுள்ள தனது மனைவியை இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டு வர வேண்டும் எனவும், தனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும்  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web