கேப்டன் நினைவிடத்தை நோக்கி மக்கள் கடல்... பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பிரம்மாண்ட அமைதிப் பேரணி!
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 28, 2025), சென்னையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பிரம்மாண்ட அமைதிப் பேரணி நடைபெற்றது.
இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலையிலிருந்து இந்த அமைதிப் பேரணி தொடங்கியது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை வகித்தார். அக்கட்சியின் அவைத் தலைவர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும் விஜயகாந்த் மீதான பற்றை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு நிற உடை அணிந்து, மௌனமாகவும் அமைதியாகவும் சென்றனர். கோயம்பேடு அம்பேத்கர் சிலையிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, தேமுதிக தலைமையகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நிறைவடைந்தது.
நினைவிடத்தில் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது பிரியத்திற்குரிய தலைவருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் நடைபெற்ற இந்தப் பேரணி மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குதல், மருத்துவ முகாம்கள் மற்றும் ரத்த தான முகாம்கள் நடத்துதல்.
"கேப்டன் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும், அவர் மக்கள் மனதை விட்டு நீங்கவில்லை. அவர் காட்டிய பாதையில் மக்கள் பணியாற்றுவோம்" எனப் பேரணியில் கலந்துகொண்ட தொண்டர்கள் உணர்ச்சிபொங்கத் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
