வெடிகுண்டு வீசுவேன் என பேசிய சீமானுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!

 
சீமான்


தமிழகத்தில் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில்  சீமான்  வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி  கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் வழங்கி உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான் ஜனவரி 28ம் தேதி பவானி சாலையில் ரிக்கல் மேடு என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும் அதனை வீசினால், உங்களை புதைக்கும் இடத்தில் புல் பூண்டு கூட முளைக்காது, என்றும் பேசி இருந்தார் . மேலும் இனப்பற்று வேண்டாம், இனவெறி கொள்ளுங்கள் எனக் கூறி இருந்தார். 

சீமான்


இந்த பேச்சு, வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், இனம் மொழி அடிப்படையில் பிரிவினையை தூண்டும் வகையில்  இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து  சீமான் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது.  இந்தப் புகாரின் அடிப்படையில்  கருங்கல்பாளையம் போலீசார், சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு 3 நாட்களுக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என  பிப்ரவரி 20 ம் தேதி நேரில் ஆஜராக கூறி சம்மன்  வழங்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே கடலூரில் உள்ள வடலூர் காவல் நிலையத்தில் சீமான் மீது பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது.

சீமான்

இதேபோன்று ராணிப்பேட்டை காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் சம்மன் வழங்கப்பட்டது. இந்த இரண்டு சம்மனுக்கும் சீமான் ஆஜராகவில்லை தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய விவகாரத்தில் 3 வது சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சீமான் செய்தியாளர்களிடம்  ” விக்கிரவாண்டி, சேலம் ஆகிய இடங்களிலும் விசாரணைக்கு ஆதரவாக வேண்டும் எனவும் ஒவ்வொரு இடத்திற்கும் ஆஜராவதாக தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் சம்மன் அனுப்பினால் ஒரு ஆள் தான் இருப்பதாக கூறியுள்ளார் .ஏஐ மூலமாக மூன்று நான்கு பேரை உருவாக்கி அனுப்ப முடியாது என தெரிவித்துள்ளார். ஒரே நீதிமன்றத்தில் ஒரே விவகாரத்தில் போடப்பட்ட வழக்கு குறித்து விசாரிக்க வேண்டும்” என நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?