Amazon, Flipkart நிறுவனங்களுக்கு ஆப்பு!! ஆன்லைனில் இந்த பொருட்களுக்கு தடை!!

 
சீட் பெல்ட்

இந்தியாவில் கார் ஓட்டுநர் மற்றும் அருகில் இருக்கும் நபர் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்ற சட்டம் உள்ளது. மீறினால் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதனால் அனைத்து கார்களிலும் சீட் பெல்ட் கட்டாயம் இடம்பெற வேண்டும். அனைவரும் சீட் பெல்ட் அணிந்து பயணிப்பதை காணமுடியும்.

இந்த நிலையில், கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்புகள் விற்பனை தொடர்பான விவகாரம் தொடர்பாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் நுகர்வோர் விவகாரத் துறைக்கு கடிதம் அனுப்பியது. அதில், தவறான விற்பனையாளர்கள் / ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மற்றும் ஒரு ஆலோசனையை வழங்கவும் வலுயுறுத்தியுள்ளது.

மத்திய மோட்டார் வாகன விதிகளின் படி, சீட் பெல்ட் அணியாதபோது அலாரம் பீப்பை நிறுத்துவதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை சமரசம் செய்யும் இதுபோன்ற கிளிப்களை ஆன்லைன் விற்பனை செய்வது நுகர்வோரின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தாக முடியும்.  

சீட் பெல்ட்

மேலும் கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களைப் பயன்படுத்துவது, மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகளில் க்ளெய்ம் தொகையை பெறுவதற்கு நுகர்வோருக்கு ஒரு தடையாக இருக்கலாம். மறுபுறம், சீட் பெல்ட் பாதுகாப்பு கவசமாகவும் செயல்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதை தொடர்ந்து நுகர்வோர் விவகாரத் துறை கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களின் விற்பனை சிக்கலை கண்டறிந்தது. மேலும் இந்த கிளிப்புகள் பல ஆன்லைன் விற்பனை தளங்களில் விற்கப்படுவதைக் கண்டறிந்தது. இது நுகர்வோரின் மதிப்புமிக்க உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சில ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் கிளிப்களை பாட்டில் ஓப்பனர்கள் அல்லது சிகரெட் லைட்டர் போன்றவற்றின் கீழ் மறைத்து வைத்து விற்பனை செய்வதும் விசாரணையின் போது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களை விற்பனை செய்வதற்கான முதல் 5 ஆன்லைன் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) உத்தரவு பிறப்பித்துள்ளது.  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ மீறும் வகையில் அமைந்துள்ளதால், Amazon, Flipkart, Snapdeal, Shopclues மற்றும் Meesho ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் உரிமைகள் மீறல் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்தது. 

சீட் பெல்ட்

மேலும் பயணிகளின் பாதுகாப்பை சமரசம் செய்யும் அனைத்து கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மோட்டார் வாகன உதிரிபாகங்களை நிரந்தரமாக நீக்குமாறு ஆன்லைன் விற்பனை தளங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற தயாரிப்புகளின் தவறான விற்பனையாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. 

மேலும் நுகர்வோரின் மதிப்புமிக்க உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவும் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு நுகர்வோர் விவகாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web