கூடுதல் பணிச்சுமை… இடைநிலை ஆசிரியர் தற்கொலை!

 
மயிலாடுதுறை
 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே இடைநிலை ஆசிரியர் மகேந்திரன் (பூவாலை) தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை தத்தங்குடி துவக்கப்பள்ளியில் பணியாற்றிய அவர், ஆசிரியர் பணியுடன் சேர்த்து மணல்மேடு, சீர்காழி, ஆக்கூர் ஆகிய மூன்று விடுதிகளின் காப்பாளர் பொறுப்பும் ஏற்றிருந்தார். கூடுதல் பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

நெஞ்சுவலி, முதுகுத்தண்டுப் பிரச்சனை, வயதான பெற்றோர்கள், ஒரு வயது மகள் ஆகிய குடும்பச் சூழ்நிலைகளில் இருந்த மகேந்திரன், மூன்று விடுதிகளையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாது என அதிகாரிகளுக்கு முன்பே கடிதம் எழுதியிருந்தார். மேலும் 5 மாதங்களாக விடுதிகளுக்கான உணவுப் பொருள் நிதி வராததால், தனது சம்பளத்திலிருந்தே செலவழித்து வந்ததே அவருக்கு மேலும் மனஅழுத்தமாக இருந்தது. இதனை சமாளிக்க முடியாமல் அவர் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

போலீஸ்

மகேந்திரனின் மரணத்திற்கு நீதி கோரிய அவரது உறவினர்கள், உடலை அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் பொறுப்புகள் திணிக்கப்பட்டதால் தான் இந்த துயரம் ஏற்பட்டது என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!