இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக தொடர்ந்து போராட்டம்... பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் முற்றுகை!

 
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 6-வது நாளாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை (DPI) இன்று (டிசம்பர் 31) காலை நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் நுங்கம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள்

கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை காலத்தைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நேற்று எழும்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,500 ஆசிரியர்களைப் போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். அனுமதியின்றி கூடுதல், அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ், போராட்டத்தில் ஈடுபட்ட 1,583 ஆசிரியர்கள் மீது எழும்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவிகள் போராட்டம்

2009-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்பு நியமிக்கப்பட்டவர்களுக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்பதே இவர்களது முக்கியக் கோரிக்கை. "ஒரே தகுதி, ஒரே வேலை இருந்தும் ஊதியத்தில் மட்டும் ஏன் இந்த பாகுபாடு?" என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே, ஆசிரியர்களின் இந்தத் தொடர் போராட்டம் தமிழக அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!