லேடீஸ் ஹாஸ்டல் பாத்ரூமில் ரகசிய கேமரா - காதலனுக்காக இளம்பெண் செய்த பகீர் காரியம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள லாலிக்கல் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் நடந்த இந்தச் சம்பவம் நேற்று வெளிச்சத்திற்கு வந்தது. இந்த விடுதியில் கர்நாடகா மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த பல இளம்பெண்கள் தங்கி, அருகில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை குளியலறைக்குச் சென்ற பெண் ஒருவர், அங்குள்ள சுவரில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிறிய கருவி ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதை ஆய்வு செய்தபோது, அது வைஃபை மூலம் இயங்கக்கூடிய அதிநவீன ரகசிய கேமரா என்பது தெரியவந்தது.

விடுதி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த அறையில் தங்கியிருந்த பெண்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்பவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இறுதியில் தனது காதலனின் தூண்டுதலின் பேரில் தான் இந்தக் கேமராவைப் பொருத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.
நீலுகுமாரி குப்தாவின் காதலன், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரவி பிரதாப் சிங் (29) என்பவர். இவர் தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். விடுதியில் தங்கியிருக்கும் இதர பெண்களின் அந்தரங்கக் காட்சிகளைப் படம் பிடித்துத் தனக்கு அனுப்புமாறு ரவி பிரதாப் சிங் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்காக அவரே கேமராவையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

கேமராவில் பதிவாகும் காட்சிகள் நேரடியாக ரவி பிரதாப் சிங்கின் செல்போனுக்குச் செல்லும் வகையில் 'ஆப்' மூலம் இணைக்கப்பட்டிருந்தது விசாரணையில் உறுதியானது.
போலீசார் நீலுகுமாரி குப்தாவைக் கைது செய்ததோடு, பெங்களூருவில் பதுங்கியிருந்த அவரது காதலன் ரவி பிரதாப் சிங்கையும் அதிரடியாகக் கைது செய்தனர். இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
