சமந்தாவுக்கு சீக்ரெட் லவ்வர்... காதலர் தினத்தில் கையில் கிளாசுடன் செல்பி... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
இந்த பதிவிற்கு நடிகை சமந்தா காதலில் விழுந்துவிட்டார் என்றும் அவரும் சீக்கிரமே தனது திருமணத்தை அறிவிக்கப் போகிறார் எனவும் கமெண்ட் போட்டு வருகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் சமந்தாவும் தொடர்ந்து காதல் போஸ்ட்டுகளை பதிவிட்டு வருகிறார். காதலர் தினமான இன்று ஸ்பெஷலாக ரெடி செய்து வைக்கப்பட்ட படுக்கையறை போட்டோ வரை போடுகிறார். இந்த பதிவு யாரை வெறுப்பேற்ற என்ற கேள்விகள் எழுந்துள்ளன. "சமந்தாவுடனான விவாகரத்துக்கு என்ன காரணம்?.. நான் குற்றவாளியா?.. மௌனம் கலைத்த நாக சைதன்யா" சீக்ரெட் லவ்வர் யாரு?: நடிகை சமந்தா தனியாக ஒரு நபருடன் காதலர் தினத்தைக் கொண்டாடியது போன்ற போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு நபரின் கையை மட்டும் காட்டி இருவரும் இணைந்து ஜூஸ் குடிப்பது போன்ற போட்டோவை பதிவிட்டுள்ளார்.

அந்த நபர் தான் சமந்தாவின் காதலரா? என்றும் ரகசிய காதலரை சமந்தா எப்போது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பார் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன. கவர்ச்சியான பிகினி உடையில் கண்ணாடி முன் நின்று எடுத்துக் கொண்ட மிரர் செல்ஃபி புகைப்படத்தையும் நம்ம செல்ஃபி புள்ள சமந்தா வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு தொழிலதிபர் யாரையோ ஒருவரை வெயிட்டாக சமந்தா பிடித்து விட்டார் . நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் சமந்தாவும் காதல் பறவையாக அடிக்கடி வெளிநாட்டில் சுற்றி வந்ததன் காரணமே அவரும் காதலில் விழுந்தது தான் என்கின்றனர் நெட்டிசன்கள். சமந்தா காதலர் தின ஸ்பெஷல் போட்டோக்களை வெளியிட்டு போட்டுள்ள கேப்ஷனை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு காதலர் யாரும் அமையவில்லை. அமைந்திருந்தால், இந்நேரம் வெளிப்படையாகவே போட்டோவை வெளியிட்டு இருப்பார். இது சும்மா நாக சைதன்யாவை வெறுப்பேற்ற சமந்தா பண்ணும் டிராமா என கலாய்த்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
