தொடர் தாக்குதலால் பாதுகாப்புப் படையினர் உட்பட 14 பேர் பலி!

 
பாதுகாப்பு படையினர்

பாகிஸ்தான் நாட்டில் ஒரே நாளில் நடைபெற்ற வெவ்வேறு குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் அடங்குவர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள மதக்கல்லூரி அருகே வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை ஓட்டிவந்த பயங்கரவாதி ஒருவர் அதை வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் 9 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பன்னு பகுதியில் காவல் நிலையத்தை குறிவைத்து நடந்த மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஷாங்கலா மாவட்டத்தில் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரும் பயங்கரவாதிகளும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த பயங்கரவாதிகள் சீன நாட்டினருக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என அதிகாரிகள் கூறினர். முன்னதாக இஸ்லாமாபாத் நகரத்தில் நடைபெற்ற பெரிய வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்து 169 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் அந்நாட்டில் பாதுகாப்பு சவால்களை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!