அப்...பாடா!! கடற்காற்று ஊருக்குள் தவழ்ந்து வரும்!! வெதர்மேன் அதிரடி!!

 
வெயில்


தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வருகிறது 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். முற்பகல் 11 மணி முதல் 4 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வெயில் அதிகரிக்க தொடங்கிய நிலையில் இடையில் பெய்த கோடை மழையால்  வெயிலின் தாக்கம் சற்றே குறைந்திருந்தது. மே 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் என்னும்  கத்திரி வெயிலின் தாக்கம் அத்துடன் மோக்கா புயல் காற்றின் ஈரப்பதம் முழுவதையும் எடுத்ததால் உருவான தாக்கம் அனைத்தும் சேர்ந்து  வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது.

வெயில் மாஸ்க் மாணவிகள் இளம்பெண்கள்

 நட்சத்திரம் வரும் 29 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இன்னும் 2 நாட்களில் சென்னையில் கடற்காற்று மிதந்து வரத் தொடங்கும் என உற்சாகமான செய்தியை வெதர்மேன் வெளியிட்டுள்ளார்.  வெயிலின் தாக்கத்தால் தற்போது இரவு நேரங்களில் அதிக புழுக்கமும் அனலும் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.   சென்னையை பொறுத்தவரை அனற்காற்றால் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.  காலை 11 மணிக்கு கடல் காற்று வீசியதாகவும், இதனால் சென்னையில் கடலோர நகரங்களில் உள்ள மக்களுக்கு வெயிலில் இருந்து ஓய்வு கிடைக்கும் எனக் கூறியிருந்தார்.

வெயில் , மழை

நேற்று மாலை முதலே சென்னையின் பல இடங்களில் இதமான காற்று வீசியது. இந்நிலையில் இன்றும் இது குறித்து  பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்  சென்னையில் இன்றும் அதிகாலை கடல் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.ஆனால் சென்னை நகரின் மேற்கு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் தொடர்ந்து சூடாக இருக்கும் எனவும்  கடல் காற்று அங்கு செல்ல நேரம் எடுக்கும் எனவும்  பதிவிட்டுள்ளார்.  அதே நேரத்தில் கரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை மற்றும் திருவண்ணாமலை,  தூத்துக்குடியின் சில பகுதிகள், நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் வெயில் அதிகமாக பதிவாகும். சென்னை, வேலூர், திருத்தணி பெல்ட் மற்றும் கரூர், புறநகர்ப் பகுதிகள் ஹாட் சார்ட்களில் முதலிடத்தைப் பிடிக்கும் என  பதிவிட்டுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web