“தேர்தல் வரும் போது இந்த பொம்பளைய (விஜயலட்சுமி) கூப்பிட்டு வருவாங்க... சீமான் ஆவேசம்!

 
சீமான்

 
பிரபல நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில்  வளசரவாக்கம் போலீசார் சீமானை , விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என கூறியிருந்தனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட சம்மனில் சீமான் ஆஜராகவில்லை. இதனையடுத்து இன்று, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அந்த சம்மனை யாரோ ஒருவர் கிழித்ததால் அவரது வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  அங்குள்ள காவலாளி அமல்ராஜ் (முன்னாள் ராணுவ வீரர்) தான் வைத்திருந்த துப்பாக்கியை போலீசாரிடம் காட்டியதாக தெரிகிறது. இதில் போலீசுக்கும், காவலாளிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்  காவலாளி அமல்ராஜை போலீசார் கைது செய்தனர்.

விஜயலட்சுமி


இதனை அடுத்து நடிகை வழக்கில், சீமான் நாளை காலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் கூறப்பட்டுள்ளது. இதனை  மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தற்போது சீமான் ஓசூரில்  , ” அம்மையார் ஜெயலலிதா பொறுப்பில் இருந்த போதும், எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பில் இருந்த 10 ஆண்டுகளில் இவர்கள் (போலீசார்) வரவில்லை. இவர்கள் (திமுக) வரும்போது மட்டும் போலீஸ் வருவாங்க. அடுத்து தேர்தல் வரும் போதும் இந்த பொம்பளைய (விஜயலட்சுமி) கூப்பிட்டு வருவாங்க.

சீமான் விஜயலட்சுமி


பெரியார் விஷயத்துல வாங்குன அடியில் என்ன செய்வது என இவர்களுக்கு  தெரியவில்லை. என்னை இவங்களால சமாளிக்க முடியல. உடனே அந்த நடிகையை கூப்பிட்டு வந்துடறாங்க. இந்த வழக்கை நான் தான் போட்டேன். இதனை முடித்து விடுங்கள் என கோரிக்கை வைத்தேன். நீதிமன்றத்தில் விசாரித்து விட்டு தான் தீர்ப்பெழுத வேண்டும். ஆனால் விசாரிக்கும் முன்னரே  புகார் கொடுத்த தரப்பிடம் ஆதாரம் கேட்க வேண்டும், விசாரிக்க வேண்டும். ஆனால், இவங்க நினைக்கும் போதெல்லாம் அந்த பொம்பளய கூப்பிட்டு வந்துடறாங்க. ” என சீமான் பேசினார்.
 நாளை வளசரவாக்கத்தில் நேரில் ஆஜராகும்படி போலீசார் சொல்லி இருப்பது பற்றி கேட்கையில், அதற்கு பதில் அளித்த சீமான்,  நாளை நான் தர்மபுரியில் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.  வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக  என்ன அவசரம்? நீங்க கூப்பிட்டதும் நான் தான் வருவேன்ல. ஏற்கனவே வந்திருக்கேன்ல? இதெல்லாம் நான் அசிங்கப்பட போறேனு செய்யுறீங்களா? சரி, நாளைக்கு இல்லைனா நாளை மறுநாள வரப்போறேன். நாளைக்கு வரவில்லை என்றால் என்ன செய்வீங்க? நான் இங்க தானே இருக்கேன். எங்கேயும் ஓடி ஒளியவில்லை.
சம்பந்தப்பட்ட அந்த பொம்பளையையும் கூப்பிட்டு வாங்க, அவங்க தரப்பு விஷயத்தையும் கேப்போம், பிறகு நானும் பேசுறேன். அவங்க ஒன்னு சொல்ல, பிறகு அத கேட்டுவிட்டு நீங்க ஒன்னு சொல்ல வேண்டி வரும். என்னைய சமாளிக்க முடியலைன்னா அந்த பொம்பளைய கூப்பிட்டு வந்துடறாங்க..” என சீமான் செய்தியாளர்களிடம் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web