மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சீமான்... விஜயகாந்த் முதல்வரானால் தமிழன் தீக்குளித்து சாக வேண்டியது தான்… இன்று மாமனிதன் கேப்டன்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேப்டன் விஜயகாந்த் குறித்து ஒரு பொது மேடையில் மிகவும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். விஜயகாந்த் நினைவு நாளில் அவரை மிகவும் புகழ்ந்து பேசினார். அவர் மோசமாக விமர்சித்தது மற்றும் பின்னர் மரியாதையாக பேசியது ஆகிய வீடியோக்களை ஒன்று சேர்த்து கூகுளில் பச்சோந்தி என்றால் என்ன என்று அடித்தால் அது சீமான் பேசிய இந்த வீடியோ தான் என்ற வகையில் அதனை இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
அதன்படி விஜயகாந்த் குறித்து அவர் மோசமாக பேசும் போது, லூசு பயலுக அந்த கூட்டணியில் இருக்கும் நல்லகண்ணு கால் தூசிக்கு பெறுவாரா விஜயகாந்த்.?காதில் ஒரு கம்மலை கூட நுழைத்ததில்லை. ஒரு கபடி அணிக்கு கேப்டனாக இருந்ததில்லை. இவர் தமிழ் உலகத்திற்கு கேப்டன் ஆகிவிட்டார். விஜயகாந்த் மட்டும் முதல்வர் ஆனால் மொத்த தமிழனும் தீக்குளித்து சாக வேண்டியது தான். தமிழருடைய தன்மானத்திற்கு வந்த மிகப் பெரிய சோதனை இது என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து கடந்த வருடம் விஜயகாந்த் நினைவு தினத்தின் போது சீமான் பேசியதாவது, அனைவராலும் அன்பாக கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். அவர் ஒரு மதிப்பு மிக்க மனிதன். அவரால் வாழ்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு. அவரால் தாழ்ந்தவர்கள் அழிந்தவர்கள் என்று ஒருவர் கூட இருக்க முடியாது. மேலும் அப்படிப்பட்ட ஒரு மகத்தான மாமனிதன் கேப்டன் விஜயகாந்த்” எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
