சீமானுக்கு அடுத்தடுத்து சிக்கல்... விஜயலட்சுமியுடன் சமரசத்துக்கு வாய்ப்பில்ல...!

 
சீமான்

நாதக ஒருங்கிணைப்பாளர் கடந்த சில நாட்களாக பெரியார் குறித்த சர்ச்சையில் சிக்கியிருந்தார். அதனை மேலும் அதிகரிக்கும் வகையில் தற்போது நடிகை விஜயலட்சுமி விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.   இந்நிலையில் விஜயலட்சுமி குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தன் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பதை நான் வரவேற்கிறேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட புகார் திரும்ப பெறப்பட்ட பிறகு விசாரிப்பது ஏற்புடையது அல்ல.  

சீமான் விஜயலட்சுமி

அதனால் சீமான் மீதான அனைத்து விசாரணைக்கும் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்றே நான் கோரியிருந்தேன். இது ஆதாரமில்லாத ஒரு அவதூறு வழக்கு. திட்டமிட்டு என் மீது சுமத்தப்பட்ட பழி. நடிகை விஜயலட்சுமியுடன் சமரசம் பேச வாய்ப்பில்லை. அதற்கான தேவையும் இல்லை. நீதிமன்றமே என்னை குற்றவாளி என கூறாத நிலையில், சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், என்னை எப்படி பாலியல் குற்றவாளி எனக் கூறலாம்? 

சீமான் விஜயலட்சுமி
பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு எதிராக போராடவே தமிழக அரசு அனுமதி தரவில்லை. மார்க்சிஸ்ட் நிலைப்பாடு என்ன? நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் வேறு பாலியல் வழக்குகளில் அமைதியாக இருப்பது ஏன்? எனக்கு எதிரான வழக்கு நிற்காது. விஜயலட்சுமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க வாய்ப்பே இல்லை" என ஆவேசமாக கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web