“அரசு மருத்துவர்கள் மக்களிடம் பேரன்பு கொண்டு நடக்க வேண்டும்” சீமான் பேட்டி!

 
இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!
 


அரசு மருத்துவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்களிடத்தில் பேரன்பு கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடியில் பேட்டியளித்த சீமான் தெரிவித்தார். 

தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த கோமான் குருஸ் பர்னாந்து பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மக்களிடத்தில் அரசு மருத்துவர்கள் பேரன்பு கொண்டு நடந்து கொள்ள வேண்டும். நாம் அவர்கள் மீது பெரு மதிப்பு வைத்துள்ளோம். 

எல்லா மருத்துவரையும் அப்படி சொல்ல முடியாது. ஒரு சில மருத்துவர்களுக்கு பணி நெருக்கடி தான் காரணம். மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. காவலர்கள் கூட பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். ஒரு சில மருத்துவர்கள் தான் இப்படி. பெரும்பாலான மருத்துவர்கள் இப்படி அல்ல. இருந்தாலும் மருத்துவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அரசு மருத்துவமனைகளில் துணை காவல் நிலையம் போல் அமைத்து காவலர்களை வைக்க வேண்டும். 

நேற்று திருநெல்வேலியில் நடந்தது சம்பவம் அல்ல. நாங்கள் 2026ல் செய்யப் போவது தான் சம்பவம். தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் எல்லா போதை பொருளும் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கிறது. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கிடைக்கிறது. மாநில அரசு போதைப் பொருளை தடுக்க தடுக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதில் மனது முழுவதும் கோபம் இருக்கிறது. 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

ஒரே வழி ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள். தமிழக மீனவர்கள் தொட்டுவிட்டால் என்னைக் கேளுங்கள். கேரள மீனவர்கள் எல்லை தாண்டி செல்ல வில்லையா? ஏன் அவர்களை சிறை பிடிக்கவில்லை? அவனை கேட்க ஆள் உள்ளது. எனக்கு கேட்க ஆள் இல்லை. கேட்க நான் வந்து உட்கார்ந்து விட்டேன் என்றால் தொட முடியுமா?

அரசு மீனவர் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளவில்லை என்றார். நடிகை கஸ்தூரியைக் கைது செய்ய இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, பேசுவதை எல்லாம் குற்றம் என்று கைது செய்யக்கூடாது. வருத்தம் தெரிவித்து விட்டால் விட்டுவிடலாம். அதை பெரிய குற்றமாக நான் கருதவில்லை. இது அரசியல் பழிவாங்கலாக நடக்கிறது என்றார். 

உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்துடன் நேற்று அரசு விழாவில் கலந்து கொண்டது குறித்து கருத்து தெரிவித்த அவர், அவர்கள் ஆட்சி. அவர்கள் கட்சி. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வருவார்கள். அரசு விழாவில் அவர்கள் அடையாளத்துடன் வருவதை ஒன்றும் செய்ய முடியாது. அதை நாம் கண்டிக்கிறோம். ஒன்றும் செய்ய முடியாது. அடுத்த முறையும் அதையே தான் அவர்கள் செய்வார்கள் என்றார்.