இன்று சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகிறார்!

தமிழகத்தில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் குறித்து விசாரணை நடத்தியதாக வியாழக்கிழமை ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி, சீமான் ஆஜராக 4 வாரகாலம் அவகாசம் கோரியுள்ளனர்.
இதையடுத்து, சீமான் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் வாயில் கதவில் போலீஸாா் அழைப்பாணையை ஒட்டியுள்ளனா். சிறிது நேரத்தில் சீமான் காா் ஓட்டுநா் சுபாகா், அந்த அழைப்பாணையை கிழித்ததாக தெரிகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்த வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் நீலாங்கரை காவல் ஆய்வாளா் பிரவீண் ராஜேஷ், சீமானின் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றுள்ளார் . அப்போது, சீமான் வீட்டு காவலரும் முன்னாள் ராணுவ வீரருமான அமல்ராஜ் போலீசாரை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து, அமல்ராஜை கைது செய்து அவரிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை காவலர்கள் பறிமுதல் செய்தனர். போலீஸ் ஒட்டிய சம்மனை கிழித்த ஓட்டுநர் சுபாகரும் கைது செய்யப்பட்டார். இருவரையும், சோழிங்கநல்லூா் நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி, காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011ம் ஆண்டு காவல் துறையில் புகாா் அளித்திருந்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு குறித்த விசாரணை செய்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸாருக்கு 21ம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் விளைவாக சீமானை விசாரணைக்கு ஆஜராகும்படி 24ம் தேதி போலீஸாா் அழைப்பாணை அனுப்பியுள்ளனா்.
இதுகுறித்த தகவல் அறிந்த வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் நீலாங்கரை காவல் ஆய்வாளா் பிரவீண் ராஜேஷ், காவலா் செளந்தரராஜன் உட்பட்டோர் தீவிர விசாரணை செய்ய சீமான் வீட்டுக்குச் சென்றனா்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!