சீமான் நாளை நேரில் ஆஜராக உத்தரவு!

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர் அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அந்த வழக்கு தொடர்பாக சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகவில்லை. அதனால் வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும். தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டிருந்தார். பிற்பகல் 3 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது திருச்சி சரக டிஐஜி வருண் குமார் சீமானின் வழக்கறிஞர்கள் சீமான் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் இன்று வர முடியவில்லை. நாளை அவர் ஆஜராவார் எனவே வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
வருண் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் வழக்கின் எதிரியான சீமான் சினிமா பார்க்க செல்கிறார், கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார் வேறு பல நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார். ஆனால் நீதிமன்ற மாண்பு என்னவென்று தெரியாமல் உள்ளார் என குற்றம் சாட்டினார். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து நாளை கண்டிப்பாக நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும் எனக் கூறியுள்ளார். வழக்கு விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஐஜி வருண் குமார் தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், சீமானுக்கு நீதிமன்றம் மாண்பு தெரியவில்லை அவர் நீதிமன்றத்தை மதிப்பதில்லை. நாளை அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் நாளையும் ஆஜரவாகவில்லை எனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!