சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டி.. நாம் தமிழர் தொண்டர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்காக, அதிமுக., திமுக தலைமையிலான கூட்டணிகள், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றன. அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான திரு. சீமான் அவர்கள் மாவட்ட வாரியாகக் கட்சிப் பொதுக்கூட்டங்களை நடத்தி, வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரு. சீமான் அவர்கள் பங்கேற்று, சிவகங்கை, மானாமதுரை மற்றும் திருப்புத்தூர் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். சிவகங்கை: இந்துஜா, மானாமதுரை: சண்முகபிரியா, திருப்புத்தூர்: ரம்யா மோகன் என்று அறிவித்தார்.

ஆனால் காரைக்குடி தொகுதிக்குரிய வேட்பாளர் பெயரை மட்டும் சீமான் அறிவிக்காமல், சஸ்பென்ஸாக வைத்து விட்டுச் சென்றார். பொதுவாக அனைத்துத் தொகுதிகளுக்குரிய வேட்பாளர்களையும் அறிவிக்கும் நிலையில் முக்கியமான ஒரு தொகுதியின் வேட்பாளர் பெயரை அறிவிக்காதது கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், காரைக்குடி தொகுதியில் திரு. சீமான் அவர்களே போட்டியிடலாம் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் ரிவிக்கின்றனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மேலும் கூறுகையில், "சீமான் ஏற்கெனவே அவர் போட்டியிட்ட திருவெற்றியூர் தொகுதியிலோ அல்லது தற்போது சஸ்பென்ஸாக வைக்கப்பட்ட காரைக்குடி தொகுதியிலோ நிற்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, திருச்சியில் நடைபெறவுள்ள 234 தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வெளியிடப்படலாம்" என்றனர்.

சீமான் காரைக்குடியில் போட்டியிட்டால், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்தத் தொகுதி, தமிழகத் தேர்தலின் முக்கியப் புள்ளியாக மாறும் என்பதால், இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் ஒருவிதமான பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
