சீமான் தமிழக அரசியலை வேறொரு திசையை நோக்கி மடைமாற்றம் செய்ய விரும்புகிறார்... திருமாவளவன் கண்டனம்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கள் சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கி வருகின்றன. இந்நிலையில் அவரது கருத்துக்கு தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் திருமா மதச்சார்பின்மை தொடர்பாக விசிக சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது.

இதில் மத சார்பின்மையை வலியுறுத்தும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். சீமான் பெரியார் குறித்து தொடர்ந்து குதர்க்கமான முறையில் பேசி வருகிறார்.இது தேவையில்லாத சர்ச்சை. தமிழக அரசியலை வேறொரு திசையை நோக்கி மடைமாற்றம் செய்ய அவர் விரும்புகிறார். இதுதமிழ்நாட்டிற்கு நல்லது கிடையாது.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இன்னும் உறுதியாகாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் கூட்டணி உடைய வேண்டும் என்பதற்காக அல்ல அவர்கள் இன்னும் ஒட்டாமல் இருப்பதற்காக தான் எனக் கூறியுள்ளார். மேலும் ரிசர்வ் வங்கியின் புதிய நகைக்கடன் விதிமுறைகள் ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் பலரும் அதனை எதிர்த்து வருவதால் கண்டிப்பாக அதனை திரும்ப பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
