சீமானுக்கு அடுத்த அதிர்ச்சி... காலியாகும் நாதக கூடாரம்... மேலும் ஒரு நிர்வாகி விலகல்!

 
சீமான்

நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீபகாலமாக அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். குறிப்பாக காளியம்மாள் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகிய நிலையில் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிர்வாகிகள் கூட அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.  

இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!

இப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிர்வாகி நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அதாவது சேலம் மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளராக இருந்த கோ. கிருஷ்ணராஜன் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

 சீமான்

அதே நேரத்தில் தன்னுடைய பயணம் தமிழ் தேசிய பாதையில் செல்ல வேண்டும் குறிப்பிட்டுள்ளார். இது சீமானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியில் இருந்து பிற கட்சிகளில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web