ஓடும் ரயில் முன்பாக செல்ஃபி மோகம்.. உடல் சிதறி இளைஞர் பலி! காப்பாற்ற முயன்ற நண்பர் கவலைக்கிடம்!

 
காங்கேயத்தான்

அண்மைக் காலமாகவே செல்ஃபி மோகத்தால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. ஆற்றில் நின்றும், உயரமான மலையில் நின்றும், ஓடும் ரயில் முன்பு நின்றும் செல்ஃபி எடுக்கின்றனர். சில நேரங்களில் இதில் தவறு நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நடந்த உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காங்கேயத்தான் (22). பொறியியல் பட்டதாரியான இவர், நேற்று முன்தினம் நண்பர்கள் சபரி (27), சபரிநாதன் (19), கவுதம் (23) மூவருடன் சேர்ந்து வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே சேலம்-விருத்தாசலம் ரயில் பாதை அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

காங்கேயத்தான்

நான்கு பேரும் மது அருந்திய நிலையில் சிறிது நேரத்தில் போதை ஏறியுள்ளது. இந்த நிலையில், அந்த தண்டவாளத்தில் காரைக்காலிருந்து பெங்களுரு நோக்கி செல்லும் ரயில் வந்தது. இதனால் நான்கு பேரும் தண்டவாளத்தில் இருந்து விலகினர்.

அதேநேரம் காங்கேயத்தான் ஓடும் ரயில் முன்பாக சென்று செல்ஃபி எடுக்க முயன்றார். தண்டவாளத்தின் அருகே சென்று செல்ஃபி எடுத்ததால், அப்போது வேகமாக வந்த ரயில் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் துண்டாகி காங்கேயத்தான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயம் அடைந்தார். அவர் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காங்கேயத்தான்

இந்த விபத்து குறித்து சேலம் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்ஃபி மோகத்தால் அடிக்கடி காங்கேயத்தான் அப்பகுதிக்கு வந்து மது அருந்துவதும், ரயில் வரும் போது, செல்ஃபி எடுத்து நண்பர்களுக்கு சமூக ஊடகம் மூலம் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தற்போது, ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுக்க முயன்ற போது, காங்கேயத்தான் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரியும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web