செல்பி மோகத்தால் விபரீதம் ... அருவியில் விழுந்து 3 பள்ளி மாணவிகள் துடிதுடித்து பலி!
ஆந்திர மாநிலம் அல்லூரி மாவட்டம் அனந்தகிரி மண்டலத்தில் உள்ள முலகும்மி அருவியில் நேற்று எதிர்பாராத விதமாக பெரும் துயரம் அரங்கேறியுள்ளது. பிளஸ்-2 தேர்வுகள் முடிந்து நிம்மதியாகப் பொழுதைக் கழிக்க வந்த 4 மாணவிகள் அங்கிருந்த பாறையில் நின்று உற்சாகமாகச் செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாணவியின் கால் நழுவ, அவரைப் பிடிக்க முயன்ற மற்ற 3 பேரும் அடுத்தடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அருவியின் ஆழமான பகுதியில் விழுந்து நீரில் மூழ்கினர்.

இந்த கோர விபத்தில் 17 வயதான திரிஷா, 16 வயதான ரத்தினகுமாரி மற்றும் 16 வயதான பவித்ரா ஆகிய 3 மாணவிகளும் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறிப் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் சென்ற அஞ்சலி என்ற மாணவி மட்டும் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டு தற்போது அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் பொதுத்தேர்வை எழுதி முடித்துவிட்டு எதிர்காலக் கனவுகளுடன் இருந்த மாணவிகள் இப்படிப் பிணமாக மீட்கப்பட்டது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹுக்கும்பேட்டை மண்டலம் லுக்கபர்தி பகுதியைச் சேர்ந்த இந்த மாணவிகள் சுற்றுலா வந்த இடத்தில் உயிரிழந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செல்பி எடுக்கும் ஆர்வத்தில் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் சென்றதே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கோடை விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க வந்த இடத்தில் 3 இளம் உயிர்கள் பறிபோன சம்பவம் ஆந்திரா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
