த்ரில் வீடியோ!! புலியோட செல்பி எடுத்த போது சில்மிஷம்!! தெறித்து ஓடும் இளைஞர்கள்!!

பொதுவாக காட்டில் சுற்றித்திரியும் விலங்குகள் அதன் போக்கில் திரிபவை.அவற்றை எத்தனை பழக்கி சர்க்கஸ் உட்பட பல இடங்களில் காட்சி பொருளாக வைத்தாலும் அவற்றை சீண்டினால் கோபம்தலைக்கேறி சீண்டினவர்களை ஒரு கை பார்த்துவிடும். வளர்த்தவர், ஆகாரமிட்டவர், நன்றிக்கடன் என எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இதனால் தேவையில்லாமல் விலங்குகளை ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுத்துவது ஆபத்தை உருவாக்கிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிலும், வேட்டையாடி வாழும் விலங்குகள் என்றால் சொல்லவே தேவையில்லை.
Kheench meri photo....😂 😂 😂 pic.twitter.com/FRZeJBD7gD
— Hasna Zaroori Hai 🇮🇳 (@HasnaZarooriHai) May 13, 2023
அந்த வகையில் சமூக வலைதளங்களில் புலி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் புலி ஒன்று சங்கிலியால் கட்டி போடப்பட்டு இருந்து உள்ளது. 2 இளைஞர்கள் அதற்கு பின்னால் சென்று அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் முன்னால் நின்றிருந்தவர் சங்கிலியால் பிணைக்கப்பட்ட புலியை குச்சி ஒன்றை வைத்து சீண்டிக் கொண்டே இருந்தார். விளையாடியபடி இருந்த புலி திடீரென அந்த நபரை நோக்கி உறுமியது. புகைப்படம் எடுக்க தயாராக இருந்த இளைஞர்கள் அந்த இடத்தில் இருந்து தெறித்து ஓடி விட்டனர். அவர்களில் ஒருவர் அழுதே விட்டார். மற்றொரு நபர் தரையில் மண்டியிட்டு, இந்த முயற்சி வேண்டவே வேண்டாம் என கெஞ்சுகிறார். வீடியோவில் இளைஞர்கள் தப்பி ஓடியதும், சிரிப்பலை எழுகிறது.
அவர்கள் இருப்பது தெரியாமல், சத்தம் கேட்டு அந்த புலி அவர்களை நோக்கி திரும்பி பார்க்கிறது. நல்ல வேளையாக அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. அதற்குள் தப்பி விட்டனர். இது குறித்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்தும், கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர். தேவையா இது? புலியை ஏண்டா சீண்டி பார்க்கிறீங்க?ஒரு அடிக்கு தாங்குவீங்களா? போய் பொழப்பைபாருங்கப்பா என பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். யாரிந்த நபர்கள்? என்பது போல் புலி பார்க்கிறது என்று பதிவிட்டு சிரிப்பு எமோஜிக்களை வெளியிட்டு உள்ளார். மிக எச்சரிக்கையுடன் இருங்கள் என ஒருவர் அறிவுரையும் வழங்கி உள்ளார். இது போல் சுவாரஸ்யமான சம்பவங்களை உயிர் உள்ள வரை மறக்க மாட்டீர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!