512 கிலோ வெங்காயம் ரூ.512க்கு விற்பனை.. லாபம் 2 ரூபாய்.. விவசாயி கதறல் !!

 
ராஜேந்திர துகாராம் சவான்

மகாராஷ்டிராவில் சோலாபூர் மாவட்டம் பர்ஷி தாலுகா பர்கோன் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திர துகாராம் சவான் (58) என்ற விவசாயி, தனது நிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்துள்ளார். அதில் விளைந்த 512 கிலோ பெரிய வெங்காயத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு, 70 கிமீ தூரத்தில் உள்ள சோலாபூர் வேளாண் விளைபொருள் விற்பனை மண்டிக்கு வாகனத்தில் கொண்டு சென்றுள்ளார். 

இன்று பெரியளவில் லாபம் பாத்துவிடலாம் என்று உற்சாகமாக சென்ற விவசாயி துகாராம் சவானுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வெங்காயம் கிலோ ரூ.1 மட்டுமே ஏலம் போனது. 512 கிலோ வெங்காயம் ரூ.512 என வந்தது. இதிலும், வெங்காய மூட்டைகளுக்கான போக்குவரத்து கூலி ரூ.509.50, ஏற்றி- இறக்க கூலி போக மீதம் விவசாயி துகாராம் சாவனுக்கு கிடைத்த வருமானம் வெறும் ரூ.2.49 மட்டுமே. 

ராஜேந்திர துகாராம் சவான்

செக்கில் பைசாவுக்கு மதிப்பில்லை என்பதால், விவசாயி துகாராம் சவானுக்கு ரூ.2 வங்கி செக் போட்டு தரப்பட்டுள்ளது. அதுவும் 15 நாட்கள் கழித்து தான் எடுக்க முடியும் என்பதால் பெரும் கண்ணீரும், கவலையுடன் வீடு திரும்பினார் விவசாயி துகாராம் சாவன்.

இது குறித்து துகாராம் சாவன் கூறுகையில், கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயத்திற்கு ரூ.20 லாபம் கிடைத்தது. இப்போது பயங்கர நஷ்டம். கடந்த 3-4 ஆண்டுகளாகவே விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளின் விலை அதிகரிப்பதால் 500 கிலோ வெங்காயம் விளைவிக்க ரூ.40,000 செலவானது. விளைச்சலுக்காக செலவிட்ட பணத்தை மொத்தமும் இழந்து விட்டேன், என வேதனையுடன் கூறினார்.

ராஜேந்திர துகாராம் சவான்

இதுபோல விவசாயிகளுக்கு கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை வீழ்ச்சிக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web