தமிழகம் முழுவதும் 111 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை!!

 
தக்காளி

கடந்த வாரம்  முதலே தக்காளி விலை ரூ100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் அதிகரித்து   கிலோ ரூ.130 வரை உயர்ந்து விட்டது. இதனால் இல்லத்தரசிகள், நடுத்தர மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை  கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில்   தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில்  இன்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

இது குறித்து அமைச்சர் விடுத்த செய்திக்குறிப்பில்  தமிழக அரசு சார்பில் தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். சென்னை முழுவதும் 82   ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.

தக்காளி விலை உயர்வு

பின்னர் மாவட்ட வாரியாக  சில ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு   மாநிலம் முழுவதும் இத்திட்டம்   விரிவுப்படுத்தப்படும்.அந்த வகையில்  தமிழகம் முழுவதும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில்  ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web