பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்க... செல்வப்பெருந்தகை வெடிவிபத்துக்கு இரங்கல்!

 
செல்வப்பெருந்தகை
 

தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ” தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே சின்னமுறுக்கம்பட்டி கிராமத்தில் பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். பட்டாசு சேகரித்து வைத்திருக்கும் ஆலைகளில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாமல் இருப்பதே இதுபோன்ற விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.  

குண்டு வெடிப்பு வெடி விபத்து வெடிகுண்டு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பட்டாசு ஆலைகளிலும் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யப்படவேண்டும். பட்டாசு தொழில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் பணிபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

ஸ்டாலின் கடிதம்

காயம் அடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சையளிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் தாயுள்ளம் கொண்ட நமது முதல்வர்  ஸ்டாலின் உரிய இழப்பீடுகள் வழங்கவேண்டும். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web