செம மாஸ்... விண்வெளிக்கு டூர் போய் வந்த பெண்கள் குழு... வரலாற்றில் இடம் பிடித்தார் பிரபல பாடகி கேட் பெர்ரி!

விண்வெளி பயண வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய 6 பேர் கொண்ட குழு விண்வெளி சென்று திரும்பியுள்ளது. இந்த குழு புளூ ஒரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் (New Shepard) விண்கலத்தில் சுமார் 10 நிமிடங்கள் நீடித்த விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
இந்தப் பயணம் ஏப்ரல் 14ம் தேதி, அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் உள்ள புளூ ஒரிஜின் நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து காலை 8:30 மணிக்கு தொடங்கியது. இந்தப் பயணம், 1963ம் ஆண்டு சோவியத் விண்வெளி வீராங்கனை வாலண்டினா டெரெஷ்கோவா தனியாக மேற்கொண்ட விண்வெளிப் பயணத்துக்குப் பிறகு, முதல் முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி முயற்சியாக கருதப்படுகிறது. அந்த வகையில் விண்வெளி பயணத்தில் கலந்து கொண்ட வீராங்கனைகள் பட்டியல்:
லாரன் சான்செஸ் – பத்திரிகையாளர் மற்றும் ஜெஃப் பேசோஸின் வருங்கால மனைவி.
கேட்டி பெர்ரி – புகழ்பெற்ற பாப் பாடகி.
கெயில் கிங் – அமெரிக்க செய்தி தொகுப்பாளர்.
ஆயிஷா பாவே – நாசாவின் முன்னாள் விஞ்ஞானி.
அமண்டா நுயென் – விண்வெளி ஆய்வு விஞ்ஞானி.
கெரியான் ஃபிளின் – திரைப்படத் தயாரிப்பாளர்.
ஜெஃப் பேசோஸ் அடுத்த இரண்டு மாதங்களில் லாரன் சான்செஸை திருமணம் செய்ய இருக்கும் நிலையில், புளூ ஒரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் இந்த சிறப்பான விண்வெளி பயணம் திட்டமிடப்பட்டது.
மேற்கு டெக்ஸாஸில் இருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம், வெறும் சில நிமிடங்களே நீடித்த பயணத்தை மேற்கொண்டது. புளூ ஒரிஜின் நிறுவனம் இது குறித்து இந்தப் பயணம் மொத்தம் 10 நிமிடங்கள் 21 விநாடிகள் நீடித்தது. விண்கலம் கார்மன் கோட்டை (விண்வெளியின் எல்லை) தொட்டு பூமிக்குத் திரும்பியது. இந்தப் பயணத்தின்போது, ஆறு பெண்களும் விண்வெளியில் மிதந்து, பூஜ்ஜிய ஈர்ப்பு நிலையை அனுபவித்தனர்.
விண்கலத்தின் காப்ஸ்யூல் 3 பாராசூட்களின் உதவியுடன் டெக்ஸாஸ் பாலைவனத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணத்துக்குப் பின், கேட்டி பெர்ரி மற்றும் கெயில் கிங் ஆகியோர் தரையைத் தொட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?விண்வெளி பயண வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய 6 பேர் கொண்ட குழு விண்வெளி சென்று திரும்பியுள்ளது. இந்த குழு புளூ ஒரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் (New Shepard) விண்கலத்தில் சுமார் 10 நிமிடங்கள் நீடித்த விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர்.