செம மாஸ்... வெள்ளி சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு 'ஸ்டைலாக' கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்!

 
ஸ்டாலின்

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக சார்பில் வெள்ளிச் சிம்மாசனம் பரிசாக வழங்கப்பட்டது. அந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்த முதலமைச்சர், கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஸ்டைலாகப் போஸ் கொடுத்தது கட்சி நிர்வாகிகளிடையே உற்சாகத்தையும், பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின்

திருவண்ணாமலை மலைப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில், திமுக இளைஞரணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 91 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின்

இந்த எழுச்சியான கூட்டத்தின்போது, திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குச் சிறப்பான ஒருப் பரிசு வழங்கப்பட்டது. அது வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு சிம்மாசனம். அந்தப் பிரமாண்டமான சிம்மாசனத்தில் அமர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கால் மேல் கால் போட்டு அமர்ந்து தனது கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் விதமாக ஸ்டைலாகப் போஸ் கொடுத்தார். இந்தப் புகைப்படம் தற்போதுச் சமூக வலைதளங்களில் திமுக தொண்டர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!