செம... சென்னை ஏர்போர்ட்டில் டீ வெறும் ரூ10 தான்... மத்திய அரசின் `உதான் யாத்திரி கஃபே' திறப்பு !

சென்னை விமான நிலையத்தில் `உதான் யாத்திரி கஃபே' என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திறந்து வைத்தார் இது குறித்து மத்திய அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, தாம் விமான போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தான் ‘உடான் யாத்ரீ கஃபே’ என்ற இந்த குறைந்த விலை சிற்றுண்டிச் சாலை என பெருமிதத்துடன் கூறினார். இதன் மூலம் இந்தியாவிலேயே கொல்கத்தா விமான நிலையத்துக்கு அடுத்தபடியாக சென்னை விமான நிலையத்தில் இந்த சிற்றுண்டிச்சாலை திறக்கப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைகளின் அடிப்படையில் இந்த சேவை தொடங்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். இங்கு, தண்ணீர் பாட்டில் ரூ.10, டீ ரூ.10, காஃபி ரூ.20, வடை ரூ.20, சமோசா ரூ.20, இனிப்பு வகை ரூ.20 என்ற விலையில் கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விமான நிலையங்களில் பயணிகள் யாரும் பசியுடன் காத்திருக்கமாட்டார்கள் , பயணிகளின் நலனில் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் 10 ஆண்டுகளாக விமான போக்கு வரத்துத் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சி கண்டுள்ளது. இது மேலும் வளர்ச்சியடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக உடான் திட்டம் நாட்டிலுள்ள பெரும்பாலான நடுத்தர மற்றும் சாமானிய மக்களையும் விமானத்தில் பயணிக்கச் செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். உடான் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின் கடந்த எட்டு ஆண்டுகளாக சுமார் 1.50 கோடி மக்கள் 600க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்களில் விமான சேவையைப் பயன்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலைய இரண்டாவது முனையத்தின் முதல் கட்டம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது எனவும் இதன் 2 வது கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் இதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. இது 3.5 கோடி பயணிகளை கையாளும் அளவுக்கு திறனுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முக்கியமானது எனவும் இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாக சென்னை விமான நிலையம் செயல்படுகிறது .
ஒரு விமான நிலையத்தின் வளர்ச்சி அந்தப் பகுதியின் மொத்த வளர்ச்சியுடன் தொடர்புடையது . போக்குவரத்து இணைப்பு, தொழில் வளர்ச்சி, வர்த்தகம், சுற்றுலா போன்ற துறைகள் வளர்ச்சியடையும் என்றும் இதற்காக நாங்கள் தொடர்ந்து மாநில அரசுடன் கலந்தாலோசித்து விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார். உடான் திட்டத்தில் தமிழ்நாட்டின் மேலும் சில ஊர்களிலும் விமான நிலையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!