செம... வாட்ஸ் அப்பில் Parent Controlled வசதி அறிமுகம்... மெட்டா அதிரடி!
அசத்தலான அறிமுகம் என்று பெற்றோர்கள் குஷியில் உள்ளனர். உள்ளங்கைக்குள் உலகம் என்று சுருங்கி விட்ட நிலையில், தூங்கிக் கொண்டிருக்கும் போதும், தூங்கி எழுந்ததுமே செல்ப்போனில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் பார்ப்பது ஏதோ வியாதி போல ஆகி விட்டது. இந்நிலையில் நமது மகனோ, மகளோ வாட்ஸ்-அப்பில் யாருடன், என்ன சாட் செய்துக் கொண்டிருக்கிறார் என்று அச்சப்படத் தேவையில்லை.
வாட்ஸ் அப் செயலியில் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் கணக்குகளை பெற்றோர் எளிதாக கண்காணிக்கும்படி புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது. 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் செயலியை பயன்படுத்தும் போது அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் பெற்றோர் கவனிக்க முடியும். இதற்காக “பெற்றோர் கட்டுப்பாடு” என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மெட்டா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ப வயது வரம்பில் மாற்றங்கள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி விரைவில் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும். இதன் மூலம் உங்கள் குழந்தைகள் தவறான நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தடுக்க முடியும் என கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
