செம... ரோலர் கோஸ்டர், மோனோ ரயில் உட்பட சென்னையில் பிரம்மாண்ட வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா!

 
செம... ரோலர் கோஸ்டர், மோனோ ரயில் உட்பட  சென்னையில்  பிரம்மாண்ட வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா!  

தமிழ்நாட்டில் தற்போது சென்னை புறநகர் பகுதிகளில்  பல்வேறு பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.  விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் பொழுதுபோக்கு பூங்காவிற்கு வருகை தருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் இருந்து  பொழுதுபோக்கு பூங்கா கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  
 மக்களிடையே பெருகி வரும் ஆதரவால் பெருநிறுவனங்கள்  பல கோடி ரூபாயை முதலீடு செய்ய   தூண்டுகின்றன.  அந்த வகையில், இந்தியாவில் முன்னணி தீம் பார்க் நிறுவனமாக, வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா நிறுவனம் ஏற்கனவே ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வொண்டர்லா தீம் பார்க் செயல்படவில்லை என்றாலும், பெங்களூருக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் படையெடுத்து வருகின்றனர். 

செம... ரோலர் கோஸ்டர், மோனோ ரயில் உட்பட  சென்னையில்  பிரம்மாண்ட வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா!  
வொண்டர்லா நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதல் பொழுதுபோக்கு பூங்காவை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.அதன்படி  சென்னை புறநகர் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட, பழைய மகாபலிபுரம் சாலையில், திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் என்ற பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக, பொழுதுபோக்கு பூங்கா அமைய உள்ளது. சுமார் 510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard எனும் கோஸ்டர் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டு, அனைத்துவித பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்த ரோலர் கோஸ்டர் இந்தியாவில் மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக இருக்கப் போவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதை போன்று, ரோலர் கோஸ்டர் சென்னையிலும் அமைய உள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த ரோலர் கோஸ்டர் அமைப்பதற்கு மட்டும் 80 கோடி ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செம... ரோலர் கோஸ்டர், மோனோ ரயில் உட்பட  சென்னையில்  பிரம்மாண்ட வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா!  
 
மோனோ ரயில்கள் பார்வையாளர்களைப் பூங்காவைச் சுற்றி அழைத்துச் செல்லவும், பல்வேறு இடங்களை மேலே இருந்து பார்க்கவும் பயன்படுத்தப்படுகின்றன.   இந்த மோனோரயில், வேகமாகவும் ஒரு சில இடங்களில் மெதுவாகவும் இயக்கப்படும்  புதுவித அனுபவத்தை கொடுக்கும்  மேலும் ஜெயின்ட் வீல் மிகவும் சிறப்பம்சம் பொருந்தியதாக உள்ளது. 35 மீட்டர் உயரமாகவும், அதே போன்று பிளாட்பார்மில் இருந்து 45 மீட்டர் உயரமாகவும் இந்த ஜெயின்ட் வீல் அமைய உள்ளது.  வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் 2025  டிசம்பர் மாதம் 15 ம் தேதி திறப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது