இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி : ஜகா வாங்கிய பாக்ஸ்கான் வெகுண்டெழுந்த வேதாந்தா !!

 
பங்கு சந்தை


பிரிக்க முடியாதது எதுவோ என தருமி பாணியில் கேட்டால் தொழில் துறையும் செமிகண்டக்கரும் என பளிச்சென சின்னக்குழந்தையும் சொல்லும் செமிகண்டக்டர் எனும் வார்த்தை தற்பொழுது அப்படி ஒரு பிரபலமான வார்த்தையாக மாறிவிட்டது. இந்தியாவின் தொழிற்துறை பயன்பாட்டில் ஏன் உலகளவில் செமிகண்டக்டர் மற்றும் சிப் பயன்பாடு முக்கிய இடம் வகிக்கிறது. ஸ்மார்ட்போன் தயாரிப்பு, ஆன்ட் ராய்டு மற்றும் ஸ்மார்ட் டிவிகள் தயாரிப்பு, நவீன சொகுசு கார்கள் தயாரிப்பில் செமிகண்டக்டர் முக்கிய பங்களிப்பு செய்கிறது. ஆனால் இதனை தைவான், தென் கொரியா, சீனா மற்றும் அமெரிக்காவில் இருந்துதான் எல்லா நாடுகளும் இறக்குமதி செய்தாகவேண்டும் என்கிற நிலை!.

பங்கு சந்தை
இதற்காகவே, இந்தியாவில் பிஎல்ஐ திட்டத்தின் கீழ், செமிகண்டக்டர் உற்பத்தியில் ஆர்வமாக உள்ள நிறு வனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு செய்தது. இதில், இந்தியாவின் நிறுவனங்கள் மட்டுமின்றி, சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கலாம் என்ற சலுகை அறிவிப்பையும் அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை தொடங்குவதற்கு தைவானின் பாக்ஸ்கான் நிறுவனமும், இந்தியாவின் வேதாந்தா நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.


இதுதொடர்பாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவலில், "பாக்ஸ்கான், வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலை தொடங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன" என்று பதிவிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் கூட்டு முயற்சியில், இந்தத் தொழிற்சாலையைத் தொடங்குவ தாகவும், குஜராத்தில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயில் இந்தத் தொழிற்சாலை அமையும் என்று அறிவித்திருந்தன. ஆனால், போதிய தொழில்நுட்பவசதிகள் இல்லை எனக்கூறி இந்த கூட்டு முயற்சியில் இருந்து வெளியேறுவதாக பாக்ஸ்கான் ஜகா வாங்கியது.

பங்கு சந்தை
இதனால் வெகுண்டெழுந்த வேதாந்தா, தன் புதிய தொழில் பங்குதாரர்களுடன் செமிகண்டக்டர் தொழிலை தொடங்க வுள்ளதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் பாக்ஸ்கான் நிறுவனம், தன் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில், இந்தியாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் இந்த தொழிற்சாலைகள் 'பிஎல்ஐ திட்டத்தின்கீழ், மத்திய அரசின் நிதி உதவியை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web