“இன்று புரட்சித் தளபதி… நாளை முதல்வர்” – செங்கோட்டையன் முழக்கம்

 
விஜய்

பெருந்துறையில் நடைபெற்ற தவெக பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் மாநில நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உற்சாக உரையாற்றினார். “அன்று எம்.ஜி.ஆரை பார்த்தேன். இன்று புரட்சித் தளபதி விஜய்யை பார்க்கிறேன்” என்று தொடங்கிய அவர், இந்தக் கூட்டம் நாளைய தமிழகத்தின் வரலாற்றை உருவாக்கும் கூட்டம் என்றார்.

விஜய்

விஜய்யை மனிதநேயம் மிக்க நல்ல தலைவர் என புகழ்ந்த செங்கோட்டையன், ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை விட்டுவிட்டு மக்கள் சேவைக்கு வந்தவர் அவர் என்று கூறினார். ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்க நல்ல தலைமை தேவைப்பட்ட நிலையில், மக்களின் கனவு இப்போது நிறைவேறியுள்ளது என்றும் தெரிவித்தார். 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என உறுதியாக சொன்னார்.

விஜய் செங்கோட்டையன்

பெரியார் மண்ணில் கூடிய இந்தக் கூட்டம் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பளிக்கும் கூட்டம் என அவர் வலியுறுத்தினார். அதிமுகவை விட்டு தவெகவில் இணைந்த செங்கோட்டையன், விஜய்யை “புரட்சித் தளபதி” என அழைத்தது தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தவெகவின் பிரச்சாரம் மாநிலம் முழுவதும் வேகம் பிடித்துள்ளதாக இந்தக் கூட்டம் வெளிப்படுத்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!