ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை... அதிமுகவில் சலசலப்பு!

 
ஜெயலலிதா
 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா  சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!
இதனையடுத்து  77 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி, நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.  மேலும் நலத்திட்ட உதவிகள், மருத்துவ உதவி, அன்னதானமும்  தொடங்கி வைக்கப்பட்டன. 

அதிமுக

இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என திரளானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பெரும்பேசுபொருளாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?