அதிமுக மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து மரணம்… இபிஎஸ் உருக்கமாக இரங்கல் பதிவு!
அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள் குடியாத்தம் நகர புரட்சித்தலைவி பேரவை துணைத் தலைவர் ஜெயக்குமார், நீடாமங்கலம் பேரூராட்சி 14 ஆவது வார்டு செயலாளர் காமராஜ், வேளாங்கண்ணி பேரூராட்சி முன்னாள் செயலாளர் வேளை. எஸ் ராமன் ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளனர். இவர்களது திடீர் மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட இரங்கல் செய்தியில் எடப்பாடி பழனிச்சாமி இவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இதேபோன்று அதிமுகவின் நீலகிரி மாவட்ட எம்ஜிஆர் நகர்மன்ற தலைவரும், உதகமண்டலம் நகர முன்னாள் செயலாளருமான டி. சுப்பிரமணியம் மறைவுக்கும் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக மரணம் அடைந்துள்ள நிலையில் அவரது இழப்பு செய்தியை கேட்டு மிகவும் வருந்தியதாகவும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
