மூத்த குடிமக்கள் சலுகை அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை... ரயில்வே அமைச்சர் சூசகம்!
மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகை மீண்டும் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, இந்தியாவில் ஏற்கனவே ரயில் கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், வளர்ந்த நாடுகளுடன் மட்டுமல்ல, அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டாலும் இந்திய ரயில் கட்டணம் மிகக் குறைவாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வளர்ந்த நாடுகளில் உள்ள ரயில் டிக்கெட் கட்டணத்துடன் ஒப்பிட்டால், இந்தியாவில் வெறும் 5 முதல் 20 சதவீத அளவிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றார். அண்டை நாடுகளிலும் இதைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இந்திய அரசு பயணிகளுக்கு மிகக் குறைந்த செலவில் போக்குவரத்து வசதியை வழங்கி வருவதாகவும் அமைச்சர் விளக்கினார்.

கரோனா காலத்துக்கு முன்பு நடைமுறையில் இருந்த மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் குறித்து நேரடி உறுதி அளிக்காத அவர், தற்போது உள்ள கட்டணமே ஏற்கனவே மிகக் குறைவாக இருப்பதாக வலியுறுத்தினார். இதனால், முதியோருக்கான ரயில் டிக்கெட் சலுகை மீண்டும் அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை என்ற எண்ணமே உருவாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
