காங்கிரஸ் மூத்த தலைவர் அந்தோணி மகன் பாஜகவில் இணைந்தார்... கேரளத்தில் கால் பதிக்கும் பாஜக!

 
அந்தோணி

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரளா முன்னாள் முதல்வரும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமாக இருந்த  ஏகே அந்தோணி மகன் அனில் அந்தோணி நேற்று பாஜகவில் இணைந்தார். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், வி.முரளிதரன், கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் முன்னிலையில் அவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனில் அந்தோணி கூறுகையில், "ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் அவர்க ளுடைய வீடுகளுக்கு உழைப்பதாக நம்புகின்றார். ஆனால், நான் நாட்டுக்காக உழைப்பதாக நம்புகிறேன். பலமுனை கொண்ட இந்த உலகில் இந்தியாவை முதன்மை இடத்தில் வைக்கும் தெளிவான தொலைநோக்கு திட்டம் பிரதமர் மோடி யிடம் உள்ளது" என்றார்.

அனில் அந்தோணி பாஜகவில் ஆக்கப்பூர்வமாக பணியாற்றுவார். தென்னிந்தியாவில் பாஜகவின் தடம் இன்னும் வேகமாக கால் பதிக்க அனில் அந்தோணி உதவியாக இருப்பார் என்று நம்புகிறோம்" என்றிருக்கிறார் பியூஸ் கோயல்.

அந்தோணி

குஜராத்தில் 2002ம் ஆண்டு முதல்வராக நடந்த கலவரத்தை 2 ஆவணப்படங்களாக பிபிசி நிறுவனம் எடுத்தது. இதில் ஒரு பாகம் வெளியாகியது. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது. இது காலனித்துவ மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டியது. அப்போது, பிபிசிக்கு எதிராக அனில் அந்தோணி தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டார். அந்த பதி வில்,"இந்திய அமைப்புகள் மீதான பிபிசியின் பார்வை, இந்திய இறையாண்மை மீதான தாக்குதலாகும்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதையடுத்து, அவர் அப்போது பதவி வகித்து வந்த கேரளா மாநில காங்கிரஸ் ஐடி பிரிவு தலைவர் பதவி உட்பட அனைத்து பொறுப்புமி பதவிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவர் திருவனந்தபுரம் இன்ஜினியரிங் கல்லுாரியில் பிடெக் மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத் தில் எம்எஸ்சி முடித்தவர். இவர் கேரளாவில் பாஜக வளர உதவியாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. 

கேரளாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் இருப்பதால், பாஜகவின் கிறிஸ்தவ முகமாக இவர் முன்னிறுத்த அதிக வாய்ப்புள்ளது. ஏகே அந்தோணி மீதான கேரள மக்களின் மதிப்பும் மகனுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகன் முடிவு வேதனை தருகிறது என ஏகே அந்தோணி தெரிவித்திருக்கிறார். என் மகன் பாஜகவில் இணைந்தது மி குந்த வேதனை, வலியை தருகிறது. 'வீட்டுக்காக அல்ல, நாட்டுக்காக பணி செய்' என்று நான் எப்போதும் மகனுக்கு அறிவுறுத்தி வந்திருக்கிறேன். ஆனால் அவன் மாறுபட்ட பாதையை தேர்வு செய்துள்ளான். நாட்டை மதஅடிப்படையில் பிளவுபடுத்த முயற்சிக்கும் ஒரு கட்சியில் இணைந்துள்ளான் என்றிருக்கிறார். கடைசி மூச்சிருக்கும் வரை காங்கிரசில் என் பணி தொடரும். 5 தலைமுறைக்கும் மேலாக நான் காங்கிரஸ் கட்சியின் விசுவாச ராணுவ வீரனாக பணியாற்றி உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்தோணி

இந்நிலையில் நேற்று சென்னையில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் கட்சி வளர்ச்சிதான் எங்கள் அடிப்படை கொள்கை. தேசிய ஜனநாயக் கூட்டணியில் அதிமுக, பாஜ இருக்கிறது. இதைத்தான் அமித்ஷா சொன்னார். இதைத்தான் நானும் சொல்கிறேன். 2024 தேர்தல் என்பது பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம். எத்தனை சீட், யார் தேர்தலில் நிற்பது என்பதை இன்று முடிவு செய்ய முடியாது. 2024 தேர்தல் இந்தியாவின் பிரதமர் யார் என்பதற்கானது. தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியாகவே தொடர்கிறது. இதில் எந்த குழப்பமும் இல்லை. இதில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பேச்சுக்கு இடம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை வழி நடத்துவது பாஜகதான். 

தமிழகத்தில் கூட்டணி பேச்சு என்றாலே கடைசி வரை இழுத்து பேரம் பேசப்படுகிறது. கூட்டணி என்றால் பரஸ்பரம் எல்லாரும் விட்டு கொடுக்க வேண்டும். தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்ற பேச்சே இல்லை. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web