மூத்த காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்!

 
சுரேஷ் கல்மாடி

மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் புணேவில் காலமானார். அவருக்கு வயது 81. நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஜனவரி 6-ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் உறுதி செய்தனர்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்த கல்மாடி, புணேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் புணே எரண்ட்வானே பகுதியில் உள்ள வீட்டில் பிற்பகல் 2 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு நவி பெத்தில் உள்ள வைகுந்த் ஸ்மஷன்பூமியில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

சுரேஷ் கல்மாடி

1964 முதல் 1972 வரை இந்திய விமானப் படையில் பணியாற்றிய கல்மாடி, 1974-ல் ஓய்வு பெற்றார். அதன்பின் அரசியலில் நுழைந்த அவர், 1995-96 ஆம் ஆண்டுகளில் ரயில்வே துறை இணையமைச்சராக இருந்தார். மேலும் 1982, 1996, 1998 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!