மூத்த தலைவர் நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி.. மூச்சுத்திணறலால் அவதி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதுபெரும் அரசியல்வாதியுமான நல்லக்கண்ணு அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால் நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, ஒன்றரை மாதச் சிகிச்சைக்குப் பின் அக்டோபர் 10ம் தேதி வீடு திரும்பினார். இருப்பினும், ஒரு வாரத்திற்குள்ளாகவே மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நல்லக்கண்ணுவின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டு, திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக உடனடியாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று புகழப்படும் நல்லக்கண்ணு, உடல் நலம் தேறி ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் விரைவில் முழுமையாக நலம் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் விருப்பம் தெரிவித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
