சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் கார் விபத்தில் சிக்கியது... பகீர் சிசிடிவி காட்சிகள்!
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் அம்பிகா சவுத்ரி திங்கள்கிழமை காலை பாலியா ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் உயிர் தப்பி பரபரப்பு ஏற்படுத்தினார். மாவட்ட தலைமையகத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, அவர் பயணித்த கார் தடுப்பு சுவரில் வேகமாக மோதியதில் முன்பகுதி நொறுங்கியது.
बलिया : सड़क दुर्घटना में बाल-बाल बचे पूर्व मंत्री अम्बिका चौधरी
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) December 1, 2025
➡ शहर में बने डिवाइडर पर चढ़ी पूर्व मंत्री की गाड़ी
➡ गाड़ी की पीछे की सीट पर बैठे थे पूर्व मंत्री अम्बिका चौधरी
➡ शहर कोतवाली क्षेत्र के रेलवे स्टेशन के पास का मामला#Ballia #AmbikaChaudhary #RoadAccident pic.twitter.com/Trq2nbLUIY
விபத்தில் சவுத்ரிக்கு எந்தக் காயமும் ஏற்படாமல் தப்பிய நிலையில், காரை ஓட்டிய அவரது சகோதரர் சுதீர் லேசாக காயமடைந்தார். மேலும் காரில் இருந்த பாதுகாவலர் ஒருவரும் மயிரிழையில் உயிர்தப்பியதாக கூறப்படுகிறது. அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணிகளில் உதவி செய்தனர்.

“விபத்து நடந்த பகுதி முழுவதும் இருட்டாக இருந்தது. சில நாட்களுக்கு முன்பும் இதே இடத்தில் லாரி மோதி இருந்தது. இருந்தும் நிர்வாகம் எந்த விளக்குகள் அமைக்காமல் அலட்சியம் காட்டியுள்ளது,” என்று சவுத்ரி கடும் அதிருப்தி தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
