பரபரப்பு.. சிகரெட்டுக்கு பணம் கேட்டதால பெட்டிக்கடையில் பெண்ணை தாக்கிய ஊராட்சி துணை தலைவர்!

 
குணசீலன்

கோவை மாவட்டம் காரமடை பெரியபுத்தூர் பகுதியில், தூத்துக்குடியை சேர்ந்த குணசீலன் (53) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதிமுகவை சேர்ந்த, அன்னூர் ஒன்றியம் வடவள்ளி ஊராட்சி  துணைத்தலைவர் பாலு என்ற பாலசுப்ரமணியம் (42) மது போதையில் சென்று சிகரெட் கேட்டுள்ளார். 

அப்போது கடையில் இருந்த குணசீலன் மனைவி சிகரெட்க்கு பணம் கேட்டுள்ளார். உடனே துணைத்தலைவரிடமே பணம் கேட்கிறாயா? என்று தகாத வார்த்தைகளால் பேசியதோடு அப்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், கடையில் உள்ள பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினார். 

குணசீலன்

இதை அருகில் இருந்த பேக்கரி உரிமையாளர்  தட்டி கேட்டபோது அவரையும் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, பேக்கரியில் இருந்த சேர் மற்றும் கண்ணாடிகளை உடைத்துள்ளார். 

குணசீலன்

இது குறித்த பெட்டிக்கடை மற்றும் பேக்கரி கடையினர் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் காரமடை போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து பாலசுப்ரமணியத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web