பெங்களூருவில் பரபரப்பு... ஹோட்டல் பால்கனியில் இருந்து பதறி குதித்த இளம்பெண்!

 
பால்கனி

பெங்களூருவில் 21 வயது இளம்பெண் தனது நண்பர்களுடன் ஓட்டலில் விருந்து கொண்டாடினார். அங்கு அதிக சத்தமாகப் பாட்டுப் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வந்த போலீசார், ஓட்டலில் இருந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பணம் தராவிட்டால் கைது செய்வோம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் கடும் அச்சமடைந்த இளம்பெண், தங்கியிருந்த அறையின் பால்கனியிலிருந்து கீழே குதித்தார்.

கீழே இருந்த இரும்பு கம்பியில் சிக்கியதில் அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பணம் பறிக்க முயன்ற போலீசார் மீது, இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் எச்.ஏ.எல். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!